Share on Social Media


சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஜூலை 2021ம் ஆண்டு முதல் அடுத்த ஆண்டு ஜூன் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில் விளையும்14 வகையான வேளாண் விளை பொருட்களுக்கு, ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு 72 சேர்த்து 1940 என்றும் முதல் தர நெல் 1960 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சோளம், கம்பு, கேழ்வரகு என உணவு தானியங்கள், பருப்புவகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் தொடங்கி,  இடுபொருள்கள் மற்றும் விதைகள், உரங்கள் என அனைத்து விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதன் விலைகளை கணக்கில் கொள்ளாமல், தனியார்துறை வணிக நிறுவனங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  குறைந்தபட்ச ஆதரவு விலைகளை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது.    விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களின் மூலம் விவசாய நிலங்களை பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பலி கொடுப்பதில் முனைப்பு காட்டும் ஒன்றிய அரசு, நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவாது, அவர்களை தற்கொலைச் சாவுகளில் இருந்து காப்பாற்றாது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *