Share on Social Media


கர்நாடக மாநிலத்திற்கு காய்கறிகள் எடுத்துச்செல்வதாகக் கூறி அனுமதி பாஸ் பெற்றுக்கொண்டு அங்கிருந்து காய்கறி பெட்டிக்குள் மது பாட்டில்களை கடத்திவந்து விற்பனை செய்த மதுக்கடத்தல் கும்பல் ஒன்றை கும்பகோணம் போலீஸ் டீம் கைது செய்திருப்பதுடன் அவர்களிடமிருந்து ரூ 10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக லாக்டெளன் விதிக்கப்பட்டதுமே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைள் மூடப்பட்டன. இதனால் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாரம் விற்பனை அதிகரித்தன. இதனைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து அதனை விற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காய்கறிகள் விற்பனை செய்வதாக அனுமதி வாங்கிக் கொண்டு பெயரளவிற்கு காய்கறிகளை எடுத்து கொண்டு மதுப்பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.மேலும் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து கும்பகோணம் வழியாக மதுப்பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாகவும் தகவல்கள் வந்தன.

b614078e cc9f 4ff9 bf81 9bf5962a02ce Tamil News Spot
கைது செய்யப்பட்டவர்

இதனிடையே சரக்கு லாரி ஒன்றை போலீஸார் சோதனை செய்வதற்காக நிறுத்தினர்.ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.இதில் சந்தேகமடைந்த போலீஸார் லாரியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.மேலும் லாரியை சோதனை செய்ததில் கால்நடை தீவனம்,காய்கறிகள், தக்காளிப் பெட்டி உள்ளிட்டவைகள் இருந்துள்ளது.தக்காளிப் பெட்டியில் மேல் பகுதியிலிருந்த தக்காளியை எடுத்துவிட்டு பார்த்தபோது தக்காளிக்கு நடுவே மதுப்பாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,616 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.அத்துடன் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காரைக்குடி,செம்பனுார் பகுதியை சேர்ந்த முருகையன் (32) உடன் வந்த மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த 16 வயது சிறுவன்,கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(33) உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும்,லாரி உரிமையாளரான பொறையாறைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை தேடி வருவதுடன் இன்னும் யார் யார் இதில் சம்மந்தப்பட்டடுள்ளார்கள் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

72f474ce 1b95 46b9 a769 1e29c48d7aec Tamil News Spot
கைது செய்யப்பட்டவர்

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம்,நாகை மாவட்டம் பொறையாறு மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, லாக்டெளன் விதிக்கப்பட்டதிலிருந்தே மதுப்பாட்டில்களை கடத்தி எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதற்காக இந்த கும்பலை சேர்ந்தவர்கள் புது டெக்னிக்கை பயன்படுத்தி வந்துள்ளனர். கர்நாடக மாநிலத்திற்கு காய்கறிகள் எடுத்துச் செல்வதாகக் கூறி இ-பாஸ் எடுத்துக்கொண்டுள்ளனர்.

பின்னர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதிகளுக்கு காய்கறிகள் கொண்டு செல்வதாகக் கூறி,மூட்டைகளில் குறைந்தளவிலான காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் அங்கிருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு காய்கறிகள், தக்காளி பெட்டிகள்,மாட்டுத்தீவன மூட்டைகளில் மது பாட்டில்களை மறைத்து வைத்து எடுத்துக்கொண்டு மீண்டும் கும்பகோணம் வந்துள்ளனர்.இதனைத் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர்.

77ab7522 4b3b 4969 b27a ee4e4ff32796 Tamil News Spot
போலீஸ் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்

பின்னர் எடுத்துவரப்பட்ட மதுபாட்டில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், குத்தாலம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டாவின் பல பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் மதுப்பாட்டில்கள் கடத்திக் கொண்டு வரும்போதே அவற்றை ஏஜெண்டுகள் மூலமாக விற்பனை செய்வதைத் தொடங்கி விடுவர்.பாட்டில்கள் கொண்டு வரும் லாரியை திருச்சியிலிருந்து பின் தொடர்ந்து கார் ஒன்று வரும்.அந்த காருக்கு வேறு எதாவது காரணம் கூறி இபாஸ் எடுத்து விடுவர்.

அந்த கார் அரை கிலோ மீட்டர் துாரம் தள்ளி லாரிக்கு பின்னாலேயே வரும்.அதில் ஏஜெண்டுகள் சிலர் வருவார்கள் மதுப்பாட்டில்கள் தேவைப்படுபவர்கள் காரில் வருபவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கொடுத்து விட்டு லாரியில் மதுபாட்டில்களை பெற்று கொள்ள வேண்டும்.மதுப்பாட்டில் சிக்கினாலும் பணம் சிக்க கூடாது,யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இந்த நூதன முறையை கையாண்டுள்ளனர்.

f6ac110b c26b 400c 8c93 b97b50ebb12f Tamil News Spot
போலீஸ் எஸ்.ஐ கீர்த்திவாசன்

அவர்களுடன் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த சிலரை அந்த கும்பலிலிருந்து விலக்கி விட்டுள்ளனர்.இதனால் ஆத்திரம் அடைந்த விலக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்கப்படுவதை போலீஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம்.ஒரு முறை கர்நாடக மாநிலத்திற்கு சென்றுவிட்டு வரும் போது ரூ 10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை வாங்கி வருவார்கள் அதனை கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ 80 லட்சம் வரை விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகிறோம். வாகன சோதனையின் போது போலீஸ் தரப்பிடமிருந்து தப்பிப்பதற்காக அசுர வேகத்தில் நிற்காமல் சென்ற லாரியை எஸ்.ஐ கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸ் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.மேலும் தகவல் கிடைத்த உடனேயே தீவிர விசாரணை மேற்கொண்டு மதுகடத்தல் கும்பலை மடக்கி பிடித்த போலீஸ் டீமை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *