Share on Social Media


நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் பதிவான வாக்குகள் கோணத்தில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இங்கு நேற்று முன்தினம் மதியம் தனியார் பிராட்பேண்ட் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் 8 பேர் திடீரென நுழைந்தனர். அவர்களில் 4 பேர் தேர்தல் ஆணைய அடையாள அட்டையின்றி வந்திருந்தனர். திமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு காரணமாக அவர்கள் வெளியேறினர். இந்நிலையில், நாகர்கோவில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், கிள்ளியூர்  காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  கடந்த 25ம் தேதி, முழு ஊரடங்கு அன்று மதியம் 12.50க்கு பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்க வேண்டும் என கூறி, தனியார் நிறுவன ஊழியர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். எங்களது முகவர்கள் விசாரித்தபோது, மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் வந்ததாக கூறி இருக்கிறார்கள். இவர்கள் வருவது குறித்து வேட்பாளர்களுக்கோ, முகவர்களுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *