Share on Social Media


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர் குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. நாடோடிகளாக வாழ்ந்துகொண்டிருந்த இந்த மக்களின் முன்னோர், மூன்று தலைமுறைகளுக்கு முன்பு புதர் மண்டிக் கிடந்த இந்த இடத்தில் குடில் கட்டித் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் குடுகுடுப்பை தொழில் செய்து வந்தார்கள். அரசு இந்தக் குடியிருப்பை அங்கீகரித்து பட்டா வழங்கியது.

குடுகுடுப்பைக்காரர்கள்

அந்தக் காலத்தில் ஆண்கள் குடுகுடுப்பைத் தொழில் செய்ய, பெண்கள் ஊசி நூல் எடுத்துச்சென்று கிராமங்களில் கிழிந்த துணிகளைத் தைத்துத்தந்து காசோ, உணவோ, பழைய துணிகளோ கூலியாகப் பெற்றுவருவார்கள்.

இன்று இந்த மக்களின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். பிளஸ் டூ வரை பலர் எட்டிப் பிடித்திருக்கிறார்கள். சிலம்பம், கால்பந்து, தடகளம் என விளையாட்டுகளிலும் குடுகுடுப்பைக்காரர்களின் பிள்ளைகள் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிள்ளைகளின் அடுத்தகட்ட நகர்வுக்குத் தடையாக இருக்கிறது சாதிச்சான்றிதழ்.

vikatan 2021 12 c0f04865 31fa 4303 b27b 2d0e7cc2e90b vikatan 2021 10 f12629ca c9e8 4c5d a558 cf2e36a Tamil News Spot
குடுகுடுப்பைக்காரர்கள்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடுகுடுப்பைக்காரர்களுக்கு ‘கணிக்கர்கள்’ என்று பழங்குடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.பி.சி எனப்படும் ‘மிகவும் பிறப்படுத்தப்பட்டோர்’ சான்றிதழே வழங்கப்படுகிறது.

பழங்குடிச் சூழலிலிருந்து மீண்டு படிப்படியாக மேலேறி வரும் குடுகுடுப்பைக்காரர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேற முடியாமல் தவித்து வந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை.

vikatan 2021 12 fe501c59 770b 4f4b 8b96 8825a5c884fe vikatan 2021 10 4eb1781b ae19 489e b22f 7f44536 Tamil News Spot
குடுகுடுப்பைக்காரர்கள்

அதனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளோடு பிள்ளைகள் படிப்பை நிறுத்திவிட்டு குடுகுடுப்பை தொழிலுக்கோ, பிளாஸ்டிக் குடங்களுக்கு பழைய துணிகளைச் சேகரிக்கும் தொழிலுக்கோ சென்று கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் இந்த மக்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கையை மையமாகவைத்து டிசம்பர் 4ம் தேதியன்று ‘நல்ல காலம்?’ என்ற பெயரில் ஓர் ஆவணப்படத்தை வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் டிசம்பர் 12-ம் தேதி ஆரணி கோட்டாட்சியர் கவிதா மற்றும் தாசில்தார் பெருமாள் ஆகியோர் நேரடியாக ஆரணி குடுகுடுப்பைக்காரர் குடியிருப்புக்கே சென்று அந்த மக்களிடம் பேசினார்கள். அவர்களின் மரபு, பழக்க வழக்கங்கள், உறவினர்கள் குறித்தெல்லாம் விசாரணை செய்த கோட்டாட்சியர், முறைப்படியான ஆய்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியரின் ஆலோசனை பெற்று விரைவிலேயே சாதிச்சான்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு சென்றார்.

WhatsApp Image 2021 12 14 at 8 27 16 PM Tamil News Spot
களத்தில் அரசு அதிகாரிகள்

பிறகு வருவாய் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி முறைப்படி சாதிச்சான்று கோரி குடுகுடுப்பைக்காரர் குடியிருப்பில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டோர் இணையவழியில் விண்ணப்பித்தார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கோட்டாட்சியர் கவிதா, “பழங்குடி சான்றிதழ் வழங்குவதற்கென சில நடைமுறைகள் இருக்கின்றன. முறைப்படி ஆய்வு செய்து தகவல்கள் சேகரிக்கவேண்டும். அந்தப்பணியில்தான் ஈடுபட்டிருக்கிறேன். அந்தப் பணிகளை முடித்து ஆட்சியரின் ஆலோசனைப்படி விரைவிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

vikatan 2021 12 31653312 5c1a 4fe9 8aa1 460e5212f315 vikatan 2021 10 546f3449 4e63 4d12 a705 9626932 Tamil News Spot
குடுகுடுப்பைக்காரர்கள்

“மூன்று தலைமுறைகளாக நாங்கள் பழங்குடிச் சாதிச்சான்று கோரி கால்தேய அதிகாரிகளைச் சந்திக்க நடந்திருக்கிறோம்̣. முதன்முறையாக ஒர் அதிகாரி எங்களைத் தேடி வந்து எங்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்ததே எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் நிம்மதியையும் தந்திருக்கிறது. எங்கள் வாழ்க்கை எப்படியோ ஓடிவிட்டது. அடுத்த தலைமுறையின் வாழ்க்கையாவது மாறவேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு, எங்கள் நீண்ட காலப் போராட்டம் முடிவுக்கு வரும்; எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது..” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் ஆரணி குடுகுடுப்பைக்காரர்கள் சங்கத் தலைவர் ராஜாமணி.

குரலற்ற மனிதர்களின் துயரம் போக்க முனைப்பு காட்டும் அதிகாரிகளின் கரம்பற்றுகிறது ஆனந்த விகடன்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.