Share on Social Media



விருதுநகர் : விருதுநகர் அகமதுநகர் நகராட்சி பூங்காவில் மாவட்ட நூலக பின்புறத்தில் நகராட்சி சமுதாய கூடம் உள்ளது. இதில் பத்து லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியும் உள்ளது. திருமண மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சமுதாயக்கூடம் குறைந்த வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் உரிய பாரமரிப்பு செய்யவில்லை. இதன் காரணமாக அடிப்படை வசதி குறைபாடு, சுகாதார வசதியின்மை, பாரமரிப்பின்மையால் கடந்த சில மாதங்களாக விசேஷ நிகழ்ச்சிகளுக்கு யாரும் சமுதாயக்கூடத்தை வாடகைக்கு எடுப்பதில்லை.மேலும் பழைய பஸ்நிலையத்தை சுற்றி 6 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதுபாட்டில் வாங்கும் குடிமகன்கள் அமர்ந்து சரக்கு அடிக்க உரிய இட வசதியாக சுற்றுப்பகுதிகளில் இல்லை. அதனால் மதுபாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் பாட்டில்களுடன் நகராட்சி பூங்கா சமுதாய கூடத்தில் அமர்ந்து குடித்து கும்மாளம் போடுகின்றனர்.நகராட்சி பூங்காவிற்கு சுற்றுச்சுவர் பாதுகாப்பு எதுவும் இல்லாத காரணத்தால் சமுதாயக்கூட முன்பகுதியில் குடிமட்டுமின்றி பலான சம்பவங்கள் விடிய, விடிய நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்டி, புதர்மண்டி கிடக்கும் சமுதாயக்கூடத்தை பராமரிப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *