Share on Social Media


மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப் போவதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் கடிதம் வழங்கியுள்ளதால் பரபரப்புஏற்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி., தருண் விஜய், ஆர்.எஸ்.எஸ்., பத்திரிகையான பஞ்சஜன்யாவின் ஆசிரியராகஇருந்தவர்.இவர், மத்திய சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகத்தின் கீழ் வரும், தேசிய நினைவிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, காங்., ராஜ்யசபா கொறடா ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நினைவிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு ஆணையம் அமைக்க, 2010ல் பார்லி.,யில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, கட்டடக்கலை, அகழ்வாராய்ச்சி, நகர வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களையே தலைவராக்க வேண்டும்.

ஆனால், இப்பதவியில் பொருத்தமில்லாதவரான தருண் விஜய் நியமிக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்ட சட்டத்தை கேலிக்குரியதாக ஆக்கியுள்ளது.எனவே, மத்திய சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் கிஷண் ரெட்டி மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சராக கிஷண் ரெட்டி கடந்த ஜூலையில் தான் பதவியேற்றார். ஆனால், தருண் விஜய் நியமனம் 2019ல் நடந்தது. அப்போது அமைச்சராக இருந்தவர்பிரஹலாத் ஜோஷி.உரிமை மீறல் தீர்மானத்தை இப்போது கொண்டு வந்தால், கிஷண் ரெட்டி தான் பதில் அளிக்க வேண்டும்.

ஜெய்ராம் ரமேசின் நோட்டீசை முதலில் ராஜ்யசபா தலைவர் ஏற்க வேண்டும். பின் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்ப வேண்டும். இதில் விதிகள் மீறப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, அக்குழு ராஜ்யசபா தலைவரிடம் அறிக்கை அளிக்கும்.அதில் ராஜ்யசபா தலைவர் திருப்தி அடைந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வட்டாரங்கள் கூறின.
– நமது டில்லி நிருபர் –



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *