Share on Social Media

ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில், 18வது ஒலிம்பிக் போட்டி (1964) நடந்தது. இதன்மூலம் ஆசிய நாடுகளில் நடந்த முதல் ஒலிம்பிக் என்ற பெருமை பெற்றது. மொத்தம் 93 நாடுகளை சேர்ந்த 5,151 வீரர்கள் பங்கேற்றனர்.

அல்ஜீரியா, காங்கோ, மலேசியா உள்ளிட்ட 16 நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. இந்த ஒலிம்பிக்கில் ஜூடோ, வாலிபால் போட்டிகள் அறிமுகமாகின. 36 தங்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் 16 தங்கத்துடன் 3வது இடத்தையும் பிடித்தன.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், 1945, ஆக.6ல் குண்டு வீசப்பட்டது. அதே நாளில் ஹிரோஷிமாவில் பிறந்த யோஷினாரி சகாய் என்ற மாணவர், துவக்க விழாவின் போது ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்தார். அணுகுண்டு வெடிப்பில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

அமெரிக்க தடகள வீரர் பில்லி மில்ஸ், 10,000 மீ., ஓட்டத்தில் பிரபலம் இல்லாத வீரராக களமிறங்கினார். முன்னணி வீரரான ஆஸ்திரேலியாவின் ரோன் கிளார்க்கை வீழ்த்தி முதலிடம் பிடித்து வியக்க வைத்தார். இதன்மூலம் 10,000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *