Share on Social Media


”பஞ்ச தந்திரம் படம் பார்த்தியா?” என்று யாரும் கேட்பதில்லை. “பஞ்ச தந்திரம் எத்தனை தடவை பார்த்திருக்க?” என்றுதானே கேட்பார்கள். சினிமா பார்க்கும் வழக்கம் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் ‘பஞ்ச தந்திரம்’ வசனம் மனப்பாடம். ‘காதலா காதலா’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘அவ்வை சண்முகி’ படத்தையெல்லாம், வேறு ஒருவர் வசனகர்த்தாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒருதடவை கற்பனை பண்ணிப்பார்த்தால், கிரேஸி மோகனின் முக்கியத்துவம் புரியும்.

மனைவியுடன் கிரேஸி

மனைவியுடன் கிரேஸி

காமெடி மன்னன் கவுண்டமணிக்கு கிரேஸி மோகன் வசனம்.. கேட்கவே கலகல என்று இருக்கிறதல்லவா? ‘தேடினேன் வந்தது’, ‘வியட்னாம் காலனி’ என்று கொழுகொழு பிரபுவுடன் கவுண்டமணி கலக்கிய சில படங்களுக்கு கிரேஸிதான் வசனம். அதுவும் ‘சின்ன வாத்தியார்’ படத்தில் காது டாக்டராக கிரேஸியும், புரோக்கராக கவுண்டமணியும் வந்து கோவை சரளாவை செந்தில் தலையில் கட்டுவதற்குப் பண்ணுகிற அட்டூழியங்களை மறக்க முடியுமா? “எம்ஏ… எம்ஏ… பிலாசபி… பிலாசபி…”

கிரேஸியின் தனித்துவம், அவரது வசனங்களில் எல்லை கடந்த விரசம், வன்மம் எதுவுமே இருக்காது. நகைச்சுவையின் வழமையான டேம்ப்ளேட்டுகளான உருவ கேலி, இரட்டை அர்த்தம், திருநங்கையர் கேலி, தொழில்சார் கேலி, சாதிமத சீண்டல் இதெல்லாம் இல்லாமல் எப்படி இத்தனை ஆயிரக்கணக்கான படங்கள் – நாடகங்கள் – தொடர்கள் எழுதினர் என்பது நிஜமாகவே ஆச்சரியம்தான்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *