Share on Social Media


புதுடில்லி:’ ‘மத்திய அமைச்சரவை யின் ஒப்புதல் பெறப்பட்டு, ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் தொடர்பான மசோதா பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
பார்லிமென்டில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது.இதற்கான அலுவல் குறிப்புகளில் ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சி வெளியிடவும், மற்ற தனியார் கிரிப்டோ கரன்சிகளை கட்டுப்படுத்தவும் மசோதா தாக்கல் செய்யப்படும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து ராஜ்யசபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:கிரிப்டோகரன்சி தொடர்பாக கடந்த கூட்டத் தொடரிலேயே மசோதா தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தோம்.
இதற்கிடையே இதில் நிறைய முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பல்வேறு திருத்தங்கள், கூடுதல் தகவல்களுடன் புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, பார்லி.,யில் இந்தக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *