Share on Social Media


சென்னை: கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நகரப்புறங்களில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவதன் மூலம் தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்ற முடியும். அதற்கான ஒரே வழி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவது தான்.எனவே, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கிராமப்புறங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்றுகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *