Share on Social Media


காஞ்சிபுரம்–கிராமங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாகவுள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், ‘கூகுள் எர்த்’ செயலி வழியாக, பட்டா நிலமா, புறம்போக்கு நிலமா என, சோதனை செய்கிறது.
மாதிரியாக ஆதனுாரில் இப்பணிகளை துவக்கவுள்ளனர்.சென்னை புறநகர் பகுதியான குன்றத்துார், முடிச்சூர், மண்ணிவாக்கம், மணிமங்கலம், படப்பை, திருமுடிவாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன.அவ்வப்போது, ஒன்றிரண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுண்டு. ஆனால், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே உள்ளன.கூட்டம்இந்நிலையில், உயர் நீதிமன்ற கண்டிப்பு தொடர்வதால், கிராம அளவில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கவும், முன்னதாகவே அவற்றை தடுக்கவும், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், தன்னார்வலர்கள், முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோர், தாசில்தார் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு எவ்வாறு செயல்படும் என, அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.இந்நிலையில் தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து, தலைமை செயலர் இறையன்பு, அனைத்து மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், நேற்று, ‘வீடியோ கான்பரன்சிங்’கில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதையடுத்து அதிகாரிகள் தரப்பில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.’ஏற்கனவே வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு என அனைத்து விபரங்களையும் சேர்த்து, அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருவாய் துறையினர் கூறியதாவது:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசின் உயர்மட்டத்தில் இருந்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றி வருகிறோம். ஆக்கிரமிப்புகளை எளிதாக அடையாளம் காண சர்வே எண் மூலம், நிலத்தை அடையாளம் காண ‘கூகுள் மேப்’ பயன்படுத்த உள்ளோம்.மாதிரி கிராமமாக ஆதனுார் கிராமத்தை எடுத்துள்ளோம். இக்கிராமத்தில் உள்ள சர்வே எண்ணையும் கூகுள் மேப்பில் பார்க்கும்படி ஏற்பாடு செய்கிறோம்.அதன்படி, அந்த சர்வே எண் நீர்நிலை பகுதியா, பட்டாவா, மேய்க்கால் புறம்போக்கு நிலமா என, கணினியில் இருந்தபடியே பார்க்கலாம். மிகவும் நவீனமான இந்த வசதி, வருவாய் துறையினருக்கு பெரிதும் உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நடவடிக்கைபொதுப்பணித் துறையினர் கூறியதாவது:ஏரிக்கரைகளிலும், ஏரிக்குள்ளாகவும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஏரிக்குள் குடியிருப்போருக்கு குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகளை பிற துறையினர் வழங்குகின்றனர்.அதுபோல் வழங்குவதால்தான், ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு விரிவான தகவல் அளித்து வருகிறோம். உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.133 ஏக்கர் ஏரியை காணோம்வரதராஜபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு தாங்கல் ஏரி, 133 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில் 1,000க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், ஏரி இருக்கும் அடையாளமே மாறி, சமவெளி பகுதி போல் காட்சியளிக்கிறது. ஒரு மாதமாக பெய்த கனமழையிலும், இந்த ஏரி சிறிதளவு கூட நிரம்பாமல், முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அறிக்கை அளிக்க உத்தரவுகுன்றத்துார் தாலுகாவில் உள்ள முக்கியமான ஐந்து கிராமங்களில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அளந்து அறிக்கை அளிக்க, மண்டல துணை தாசில்தார் பாலசந்தர், வட்ட துணை ஆய்வாளர் பாஸ்கர், கொளப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனிப்புகழ் ஆகியோர் தலைமையில் குழு அமைத்து, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சைலேந்தர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஐந்து கிராமங்களிலும் தலா ஒரு நில அளவையர், பொதுப்பணித் துறையில் ஒருவர், வி.ஏ.ஓ., போலீசார், கிராம உதவியாளர் ஆகியோர் உடைய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.வேகவதி ஆறு ஆக்கிரமிப்புகாஞ்சிபுரத்தில் ஓடும் வேகவதி ஆறு, 1,400 ஆக்கிரமிப்பு வீடுகளால், கால்வாயாகவே சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளை வழங்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.ஆக்கிரமிப்பாளர்கள் 1.5 லட்சம் ரூபாய் செலுத்தாத காரணத்தால், வீடுகளை ஒப்படைக்க முடியாது என, குடிசை மாற்று வாரியம் தீர்மானமாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருவதால், 1,400 வீடுகளில் உள்ள ஓட்டுகளை அள்ள, அரசியல் கட்சியினர் திட்டமிடுகின்றனர்.இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல் நடப்பதாக தெரிகிறது.பொதுமக்கள் பார்க்க ஏற்பாடுவருவாய் துறை ஆவணங்களில் மட்டுமே, ஒரு நிலத்தின் தன்மை, வகை போன்றவை இடம் பெற்றிருக்கும்.

ஆனால் வருவாய் துறையில் புதிய முயற்சியாக, கூகுள் மேப்பில், சர்வே எண்களை வைத்து, அந்த நிலத்தின் தன்மை, வகைப்பாடு போன்ற விபரங்களை பதிவேடு செய்யும் பணி துவங்கப்படுகிறது.உதாரணமாக, கூகுள் மேப்பில், ஆதனுார் கிராமத்தை பார்த்தால், அதில் உள்ள சர்வே எண்கள், அந்த நிலத்தின் வகை போன்ற விபரங்கள், பொதுமக்கள் பார்வைக்கே தெரியும்படி, ஏற்பாடு செய்யப்பட உள்ளது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *