Share on Social Media


ஹுப்பள்ளி : ”பெலகாவியில் நடக்கவுள்ள குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், கித்துார் கர்நாடகா பகுதிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்,” என சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.

பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் வரும், 13லிருந்து குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகளை ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது.மதம் மாற்ற தடை சட்ட மசோதா உட்பட பல முக்கிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஹுப்பள்ளியில் நேற்று கூறியதாவது:பெலகாவியில் கித்துார் கர்நாடகா பகுதிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.பிரச்னைகள் சந்திப்பவர்கள், அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் உரிய தீர்வு கிடைக்கும். கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தம் செய்ய வேண்டும்.கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய சட்ட மசோதாக்கள் இன்னும் வரவில்லை. இது குறித்து முதல்வர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *