Share on Social Media


ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் உட்பட 5 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவி விலக வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

இத்தாக்குதலை பாகிஸ்தானின் லக்ஷர்-இ-தொய்பா ஆதரவுடன், கராச்சியில் இருந்து இயங்கும் டி.ஆர்.எப்., எனும் எதிர்ப்பு படையின் ஆட்கள் நடத்தியுள்ளனர். பொது மக்கள் ஐவரையும் கை துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர். அதில் பீகாரில் இருந்து வந்து ஸ்ரீநகர் தெருக்களில் வியாபாரம் செய்து வந்த வீரேந்திர பஸ்வான் என்பவரும் அடக்கம்.

வெளியாட்கள் காஷ்மீருக்குள் வந்து வேலை பார்க்கக் கூடாது என்ற செய்தியை இதன் மூலம் அவர்கள் கடத்துவதாக காஷ்மீர் டி.ஜி.பி., தில்பக் சிங் கூறினார். டாக்சி சங்கத் தலைவர் முகமது சபி லோன் என்பவரை போலீஸ் இன்பார்மர் என குற்றஞ்சாட்டி சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார்.
போலீசார் சமீபத்தில் தேடுதல் வேட்டையின் போது டி.ஆர்.எப்., பயங்கரவாத இயக்கத் தலைவன் அப்பாஸ் ஷேக்கை கொன்றனர். இந்நிலையில் சமூகத்தின் குறிப்பிட்ட வகுப்பினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இத்தாக்குதல் என அரசு எச்சரித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் துணை நிலை கவர்னர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்களை கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அப்பாவி மக்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்காகவும் பழிவாங்கப்படுவார்கள்.” என்றார்.

latest tamil news

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பள்ளி முதல்வர் சுபீந்தர் கவுரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. ஏராளமான சீக்கிய சமூதாயத்தினர் அந்நிகழ்வில் பங்கேற்றனர். எங்களுக்கு அமைதி தேவை என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும் பல்வேறு கட்சியினர் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் ஜனநாயக கட்சி செய்தித் தொடர்பாளர் சுஹைல் புகாரி, “பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய துணை நிலை கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.” என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *