Share on Social Media


ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள போதிலும், இன்னும் அவர்களால், முறையாக ஆட்சி அமைக்க முடியவில்லை. ஐநா அறிவித்துள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கான் அரசை உலக நாடுகள் அங்கீகரிப்பதும் சாத்தியம் இல்லை என்ற நிலை தான் உள்ளது.

பாகிஸ்தான், சீனா தவிர வேறெவரும் தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. கத்தார், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முதலில் ஆதரவு தெரிவித்தாலும், தற்போது பின் வாங்கி விட்டன. இந்தியாவை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆன உதவியை ஐ.நா மூலம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முக்கியமாக, இந்தியாவின் அறிக்கையில், ஆப்கான் மக்களை பற்றி கூறியுள்ளதே தவிர, தாலிபான் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. 

இந்நிலையில், தலிபானின் வெளியுறவு அமைச்சர் என அறிவிக்கப்பட்டுள்ள, அமீர்கான் முத்தாகி, செவ்வாயன்று, நடத்திய பத்திர்க்கையாளர்கள் சந்திப்பில், தலிபான்கள், காஷ்மீர் மட்டுமல்ல ‘கொடுங்கோன்மை’ நடக்கும் அனைத்து இடங்கள் நிலைமை பற்றி தாலிபான்கள் அக்கறை கொண்டுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்கப்பட வேண்டும்” என்று விரும்புவதாகக் கூறினார்.

ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!

முன்னதாக செப்டம்பர் 3 ம் தேதி, தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஒரு இஸ்லாமியராக, காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்காக குரல் எழுப்ப எங்களுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில், ரூ.9000 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐநா சபையின் உயர் மட்ட கூட்டத்தில்,அறிவிக்கப்பட்டதை தலிபான்கள் பாராட்டினர். தலிபான்கள் இந்த நிதி உதவியை பொறுப்புடன் பயன்படுத்தி வறுமையைப் போக்கப் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள். 

ஆப்கானிஸ்தான், தாலிபான்கள் கட்டுபாட்டில் சென்றதிலிருந்து, அங்கு, நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பொருளாதாரம் அகல பாதாளத்தில் சென்று விட்டது. மக்கள் உணவு கூட வாங்க முடியாத அவல நிலையில் உள்ளது. காபூலின் பழைய பொருட்கள் விற்கப்படும் சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இவர்கள் வாங்குவதற்காக வரவில்லை. தங்கள் பொருட்களை விற்பதற்காக வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பணம் ஏதும் இல்லாத காரணத்தினால், தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

 

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *