dummy noimg Tamil News Spot
Share on Social Media

ஸ்ரீநகர்:ம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக போராட்டங்களில் இணைந்து செயல்படும் வகையில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆக.5ல் நீக்கப்பட்டது.மேலும் ஜம்மு – காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா ஒமர் அப்துல்லா மெஹபூபா முப்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது.அதில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜ்ஜத் லோன், மக்கள் இயக்கத் தலைவர் ஜாவித் மிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மருத்துவக் காரணங்களால் காங்கிரஸ் கட்சியின் ஜம்மு – காஷ்மீர் தலைவர் குலாம் அஹமது மீர் பங்கேற்கவில்லை.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பரூக் அப்துல்லா கூறியதாவது:கடந்தாண்டு ஆக. 5க்கு முன் ஜம்மு – காஷ்மீரில் இருந்த நிலையே மீண்டும் தொடர வேண்டும். அதற்காக இணைந்து போராட புதிய கூட்டணியை அமைத்துள்ளோம். இது அரசியல் சாசனப் போராட்டம்.எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *