Share on Social Media


ஜம்மு காஷ்மீர்: இந்திய அரசு குறித்து கருத்து தெரிவித்த தன்னை மீண்டும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹெதர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதிகள் சிலர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் பலியானார்.

பலியான வீட்டின் உரிமையாளர் பயங்கரவாதி இல்லை என்றும் ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்துகிறது என ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முக்கியமாக இறந்தவரின் உடலை அவர் குடும்பத்தினர் கேட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்ததாவது: இந்திய அரசு அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்துகிறது. இது மனிதத்தன்மையற்ற செயல் என தெரிவித்தேன். இதையடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *