Share on Social Media


புதுடில்லி: தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிய பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறுகையில் காளி தேவிதான் என்னை காப்பாற்றினாள். மேற்கு வங்கத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.. ஆட்சி அமைவது உறுதி என கூறினார்.

மேற்குவங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. குண்டு துளைக்காத கார் என்பதால் நட்டா காயமின்றி தப்பினார்.

இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங். கட்சிக்கும், பா.ஜ.வுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இன்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில் கல்வீசி தாக்கதல் நடத்தியது திரிணாமுல் காங். தொண்டர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மம்தா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி, இரு நாட்களின் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என கவர்னர் ஜெக்தீப் தங்காருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *