kkrwins Tamil News Spot
Share on Social Media

மாவி வீசிய 2வது ஓவரில், கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார் ஸ்டோக்ஸ். மீண்டும் வந்தார் கம்மின்ஸ். இம்முறை, ஸ்டோக்ஸின் விக்கெட் காலி. டைவ் அடித்து கேட்சைப் பிடித்தார் கார்த்திக். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் வந்து ஒரு பவுண்டரியை விரட்டி பயம்காட்ட, அவரையும் அதே ஓவரில் அவுட்டாகி விரட்டிவிட்டார் கம்மின்ஸ். `இது கனாவாக இருந்திடக்கூடாதா’ என ராஜஸ்தான் ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். மாவி வீசிய 4வது ஓவரில், சாம்சனின் விக்கெட்டும் காலி. அடுத்து ரியான் பராக் வந்தார். அடுத்த ஓவரிலேயே, பராக்கின் விக்கெட்டையும் படக்கென பறித்தார் கம்மின்ஸ். 6 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருக்க, ராஜஸ்தானின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப்கள் மூட்டைமுடிச்சைக் கட்ட துவங்கியிருந்தார்கள்.

நாகர்கோட்டி வீசிய 8வது ஓவரில், பட்லர் ஒரு பவுண்டரியும், திவேதியா ஒரு பவுண்டரியும் அடித்தனர். நரைன் வீசிய 9வது ஓவரில், லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். நாகர்கோட்டி வீசிய 10வது ஓவரில், மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி கிட்டியது பட்லருக்கு. 10 ஓவர் முடிவில், 60 பந்துகளில் 118 ரன் தேவை என்ற நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்தது ராயல்ஸ். 11வது ஓவரை வீச சுழல் சக்கரவர்த்தி, பட்லரின் விக்கெடைக் கழட்டி எறிந்தார். 35 ரன்களில் சோகமாக பெவிலியனுக்குத் திரும்பினார் பட்லு. நரைன் வீசிய 12வது ஓவரில், டீப் பாயின்ட்டில் ஒரு பவுண்டரி, ஸ்வீப்பில் ஒரு சிக்ஸர் என ஒண்டிப்புலி சர்பத் குடித்தவர் போல் தெம்பாக விளையாடிக்கொண்டிருந்தார் திவேதியா. கடைசியில், வருண் சக்ரவர்த்தி வீசிய 15-வது ஓவரில் அவரும் அவுட். சப்போர்ட்டிங் ஸ்டாஃப்களோடு அணி வீரர்களும் மூட்டைகளைக் கட்டி முடித்திருந்தார்கள். நரைன் வீசிய 17-வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளை அடித்தார் கோபால். அப்போதும், கொல்கத்தாவுக்கு கோபம் கொப்பளித்தது. பாவத்த…

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *