Share on Social Media


`காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி!’

– இந்தச் செய்தியைக் கேட்க எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது?

இனி வரப்போகும் காலங்களில் இப்படியான செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடும் என்பதுதான் பேருண்மை!

நோய்க்கணிப்பாக `காலநிலை மாற்றம்’ என்பதை மருத்துவர் தனது மருத்துவக் குறிப்பேட்டில் பதிவு செய்திருப்பதில் எவ்வளவு புதுமை ஒளிந்து கிடக்கிறது. ஆனால் அந்தப் புதுமை மிகப்பெரும் ஆபத்தை கண்முன் நிறுத்துகிறது.

புற்றுநோயாளி, இதய நோயாளி என்பதைக் கேள்விப்பட்டு வந்த நாம், சமீபமாக புதுப்புது நோயாளிகளைச் சந்தித்து வருகிறோம். `கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி…’ எனும் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் நாம் மீளாத சூழலில், இப்போது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி என்பது நமக்கான எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டும்.

Climate Change (Representational Image)

Climate Change (Representational Image)
AP Photo/Victor Caivano

ஜூன் மாதத்தில் கடுமையான வெப்ப அலைகள் பசிபிக் கடலோரத்தில் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளைத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்த வெப்ப அலைகள் பல நூறு மக்களை மரணிக்கச் செய்தது மட்டுமன்றி, அடுத்த சில மாதங்களுக்கு காற்றின் தரத்தை பெருமளவில் மாசுபடுத்தின. இதனால் கனடா நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ஏற்கெனவே உள்ள நீரிழிவு நோய் மற்றும் இதய நோயின் தீவிரம் சமீபமாக அதிகரித்திருப்பதாகவும், உடலின் நீர்த்துவத்தை தக்கவைக்க அவர் கடினப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார் மருத்துவர். முக்கிய விஷயமாக ஏற்கெனவே இருந்த ஆஸ்துமா தொந்தரவு, இப்போது அதிதீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டி, காலநிலை மாற்றத்தை காரணப்படுத்துகிறார்.

வெகு தூரத்தில் இருக்கும் கனடாவில் இப்படி ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நம்மூர் பகுதியில் காலநிலை சார்ந்த நோயாளி குறித்த பதிவுகள் வெளிவர நீண்ட நாள்கள் ஆகாது. மேலாதிக்க நாடுகள் செய்யும் இயற்கை சார்ந்த தவறுகள் மற்றும் சுரண்டல்களால் வளரும் நாடுகளும் பாதிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *