Share on Social Media


அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்தின் ட்விட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டிருக்கிறது. கதிர் ஆனந்த் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘என்னுடைய @dmkathiranand ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கில், பதிவிடப்படும் தகவல், செய்தி மற்றும் பதிவுகளுக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே, எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளைப் பரப்புவோர்மீது சைபர் க்ரைம் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த தகவலை அவர் பகிர்ந்திருக்கிறார்.

செய்திக் குறிப்பு

செய்திக் குறிப்பு

சமூக வலைத்தளங்களில் கதிர் ஆனந்த் குறி வைக்கப்படுவது, இது முதல் முறை அல்ல… ‘கொரோனா’ தடுப்புப் பணிக்காக, 2020 மார்ச் 28-ம் தேதி, தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருந்தார் கதிர் ஆனந்த். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள் கதிர் ஆனந்த் பெயரிலிருந்த ‘ஃபேஸ்புக்’ பக்கத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. அதில், ‘‘தொகுதிக்கான முழு நிதியையும் பல்வேறு திட்டங்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துவிட்டேன். எனவே, கொரோனா தடுப்புக்காக நிதியை ஒதுக்க முடியவில்லை’’ என்று பதிவிடப்பட்டிருந்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *