Share on Social Media

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமச்சந்திரன். கமுதியில் இவர் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்து, “அசிஸ்டென்ட் மேனேஜர் ராமச்சந்திரன் வீடு எங்க இருக்கு?” எனக் கேட்பதை விட, “ரப்பர் கலெக்‌ஷன் ராமச்சந்திரன் வீடு எங்க இருக்கு?” எனக் கேட்டால் சட்டென வீட்டை அடையாளம் காட்டி விடுகிறார்கள்.

வீட்டின் வரவேற்பறையில் பென்சில் அழிப்பானான ரப்பர்களில் காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், வீட்டு உபயோகப் பொருLகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பொம்மைகள், செடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், மிட்டாய் வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் என பல பொருட்களின் வடிவங்களில் மொத்தம் 786 ரப்பர்களைச் சேகரித்து வைத்துள்ளார்.

ரப்பர் கலெக்‌ஷன்ஸ்

ரப்பர் கலெக்‌ஷன்ஸ்

ரப்பர் சேமிப்பிற்கான காரணம் குறித்து அவரிடமே கேட்டோம். “என்னோட சொந்த ஊரு மதுரை. நாலாம் கிளாஸ் படிச்சப்போ ரப்பர் வாங்குறதுக்காக ஸ்டேஷ்னரி கடைக்குப் போனேன். ‘ரப்பர் இருக்காண்ணே’ன்னு கடைக்கார அண்ணன்கிட்ட கேட்டேன். அதற்கு அவர், ’இதுல எந்த ரப்பருப்பா வேணும்?’னு நாலஞ்சு ரப்பரை எடுத்துக் காட்டினார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *