Share on Social Media


முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி

உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; – வயங்கு ஓதம்

நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!

புல்லாப் புலப்பதோர் ஆறு.

– நாலடியார்

(கடல் அலைகள் ஓயாது மோதுவதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே, முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம் – தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது)

மிழ் சினிமாவின் காதல் விரோத வில்லன்களுக்கும், மகள்/மகனின் காதலை ஒப்புக்கொள்ள முடியாத பிடிவாத குணம் உடைய தாய் தகப்பன்களுக்கும் இதுவரை இந்த மாத்திரை பற்றித் தெரியாது… நல்ல வேளையாக!

Love

Love
Image by Gerd Altmann from Pixabay

ஆமா…. அப்படியென்ன மாத்திரை இது?

ஃப்ளூஆக்ஸிட்டின்… இதுபோன்ற மனச்சோர்வு மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு காதல் வயப்படுவதிலும், காதலில் நிலைத்திருப்பதிலும் இடையூறு ஏற்படும். காதலின் வேதிப்பொருள்களோடு மாத்திரைகளிலுள்ள வேதிப்பொருள்களோடு மோதும்போது இந்தச் சம்பவம் நடக்கிறது. அதனால் மனம் மந்தப்படும்போது உறவு சலித்துவிடுமாம். செக்ஸிலும் ஈடுபாடு இல்லாமல் போய்விடும்.

`ஒரு தம்பதி விவாகரத்தின் எல்லை வரை வந்துவிட்டார்கள். அந்தப் பெண் மனச்சோர்வுக்காக மாத்திரை எடுத்துக்கொள்வது தெரிந்தது. மாத்திரையை நிறுத்திவிட்டு, தாம்பத்யத்தில் அக்கறை காட்டச் சொன்னேன். கணவனின் மீது மீண்டும் ஈடுபாடு வந்தது. விவாகரத்து நின்றது. இப்போது அவர்கள் ஏராளமாக ஒருவரை ஒருவர் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்!’ என்று உதாரணத்தோடு விளக்குகிறார் டாக்டர் ஹெலன் எனும் மனவியலாளர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *