Share on Social Media


`இன்னும் இந்தியாவில் ஏராளமான காதல்கள் பெற்றோர்களால் மறுக்கப்படுகின்றன. சில காதலர்கள் கட்டி வைத்து உதைக்கப்படுகிறார்கள். சில காதலர்கள் கொல்லப் படுகிறார்கள். பல காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நிறைய இந்தியர்களுக்கு காதல் என்பது தோல்விதான். ரொமான்ஸ் என்பது மேற்கத்திய கலாசாரம். இந்தியாவில் அதற்கெல்லாம் இடமே இல்லை…’ – இப்படி ஒரு கருத்தும் உண்டு.

இப்போது விஞ்ஞானிகள் கூறுவதோ வேறு விதம். ரொமான்ஸ் என்பது நம் மூளையிலேயே பதிக்கப்பட்டிருக்கிறது. 166 கலாசாரங்களை ஆராய்ந்தபோது, 147 கலாசாரங்களில் ரொமான்ஸ் உணர்வு உயிர்த்திருப்பதை அறிய முடிந்தது. ஐரோப்பா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் என வேறுபட்ட கலாசார மக்களிடம் ஆய்வு நடத்தியபோதும், அவர்களிடம் ஒரே விதமான விடையே கிடைத்தது.

ரொமான்ஸ் காதல் என்பது உலக அளவில் ஒரே உணர்வோடு இருந்தாலும், கலாசார வெளிப்படுத்தல்கள் மட்டும் மாறுபடுகின்றன. இந்திய இளைஞர்களிடையே எடுக்கப்பட்ட சர்வே படி 76 சதவிகிதம் பேர் காதல் இல்லாவிட்டாலும், சரியான குணாம்சங்கள் கொண்டவரையே மணக்க விரும்புகின்றனர். அமெரிக்காவில் இது 14 சதவிகிதம்தான்.

Couple (Representational Image)

Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

ரொமான்ஸ் காதலுக்கு டோபமைன் தூபம் போடுவது போல, பாசம் – பிணைப்புக்கு ஆக்ஸிடோசின் என்ற மூளை வேதிப்பொருள் உதவுகிறது. நீண்ட காலமாக நம்மோடு வாழ்ந்துவரும் துணையைத் தழுவும்போதும், நம் குழந்தைகளை அணைக்கும்போதும் இதுவே செயல்படுகிறது. தாய் குழந்தையைப் பேணும்போது வெளிப்படும் உணர்வும் இதிலிருந்தே பிறக்கிறது. சில விலங்குகளில் இதை நீக்கி சோதனை செய்தபோது, குடும்ப உணர்வு குறைந்ததை அறிய முடிந்தது. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளைக் குணப்படுத்த ஆக்ஸிடோசினைப் பயன்படுத்த முடியுமா என்று இப்போது ஆராய்கிறார்கள்.

ஏதாவது பிரச்னையால் ஆக்ஸிடோசின் குறைபாடு இருந்தால், நீடித்து பிணைப்போடு வாழ முடியாதா? `பரஸ்பர மசாஜ் மற்றும் தாம்பத்ய வாழ்க்கை மூலம் ஆக்ஸிடோசினைத் தூண்டி மகிழ்ச்சியை அடைய முடியும். புதுமையான விஷயங்களை இருவரும் இணைந்து செய்வதும் நல்ல பயிற்சி’ என்கிறார் மனவியலாளர் ஹெலன். ஆனால், இந்திய சூழலில் நம் தம்பதிகளுக்கு இதெல்லாம் சரிவருமா, என்ன? இப்போது `சரிவரும்’ என்கிற பதில் நிறையவே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நன்று!

– சஹானா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *