Share on Social Media


கோயம்புத்தூர் : காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் காதலன் முகத்தில் காதலி ஆசிட் வீசி தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காதல் தோல்வி காரணமாக ஏற்படும் விரக்தியில் பலரும் பல்வேறு விதமான தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.  அந்த வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகேஷ்(30) என்பவரும், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி(27) என்பவரும் ஒரே இடத்தில பணிபுரிந்த பொழுது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

ALSO READ ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர்!

இதனையடுத்து இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் தனியாக கோவையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தனர்.  ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி தனது கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல ராகேஷிற்கும் இன்னொரு பெண்ணுடன் திருமணமாகி விட்டது.  ஆனால் இந்த விஷயத்தை ராகேஷ் ஜெயந்தியிடம் கூறாமல் மறைத்து வாழ்ந்து வந்துள்ளார். 

இதனை தொடர்ந்து ராகேஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான செய்தி ஜெயந்திக்கு தெரியவந்தது.  இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி இதுகுறித்து ராகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்த வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.  உடனே தனது கைப்பையில் ஜெயந்தி மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷின் முகத்தில் ஊத்திவிட்டார்.  அதனை தொடர்ந்து ஒரு கத்தியை எடுத்து மீண்டும் ராகேஷை குத்தினார். 

இதனால் ராகேஷின் கண்ணிலும், கையிலும் காயம் ஏற்பட்டது.  பின்னர் ஜெயந்தி தான் வைத்திருந்த தூக்க மாத்திரையை கணக்கில்லாமல் அதிகமாக விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் ராகேஷ் மற்றும் ஜெயந்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ ’செமஸ்டரில் 90% பேர் தோல்வியா?’ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.