Share on Social Media


“உணவுப் பொருள்களின் காலாவதி தேதியில் காட்டுகிற கவனத்தை, மக்கள் மற்ற விஷயங்களிலும் காட்ட வேண்டும். முக்கியமாக ஆணுறை வாங்குவதிலும்… தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். கட்டாயம் காலாவதி ஆகியிருக்கக்கூடாது. காலாவதியானது பயன்படுத்துகையில் கிழிந்துவிடலாம். நூறு பேரில் 2 அல்லது 3 பேருக்கு இப்படி நிகழ்வதாகத் தெரிகிறது. ஆணுறைகளைக் கழுவி விட்டு மறுபடியும் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் செய்யவே கூடாது. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ காண்டம் மறைக்காத பகுதியில் வைரஸால் வருகிற மரு இருந்தால், அது ஒருவருக்கொருவர் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

Couple (Representational Image)

Couple (Representational Image)
Photo by Loc Dang from Pexels

ஆர்கசத்தை தூண்டுகிற காண்டம்கூட தற்போது விற்பனையில் இருக்கிறது. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்தலாம். உணவும் உறக்கமும் போலத்தான் காமமும். தேவைப்படாத கருவுறுதலில் அதைத் தொலைக்காமல் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசிக்கொண்டிருக்கிறோம். கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் [email protected] என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *