Tamil News large 2644869 Tamil News Spot
Share on Social Media

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், சுய மரியாதை உள்ள பெண் இறந்துவிடுவார் அல்லது மீண்டும் அதை நடக்க அனுமதிக்க மாட்டார் என கேரள காங்., தலைவர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

காங்., கூட்டணி கட்சிகள் சார்பில் திருவனந்தபுரத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்., தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன், சோலார் பேனல் ஊழலில் சிக்கி கைதாகியிருக்கும் சரிதா நாயர் போன்றோரை அழைத்து வந்து முதல்வர் பினராயி விஜயன் பிளாக்மெயில் அரசியல் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்தார். சரிதா நாயரை பாலியல் தொழிலாளி என்றும் விமர்சித்தார்.

latest tamil news

மேலும், சுயமரியாதையுடைய பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் இறந்துவிடுவார் அல்லது மீண்டும் அவ்வாறு நடக்க விடமாட்டார் என்று கூறினார். இக்கருத்து பாலியல் பலாத்காரத்திலிருந்து மீண்டு வாழும் பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக கண்டனம் கிளம்பியுள்ளது.

இது பற்றி கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், “பலாத்காரம் சமூகத்தில் மிக மோசமான குற்றம். இது போன்ற குற்றங்களுக்கு இரையாவது பெண்களின் தவறு அல்ல. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தவறான கருத்துக்களை சொல்லியிருக்க கூடாது. இத்தகைய கருத்துக்கள் பரவலாக கண்டிக்கப்பட வேண்டும்.” என கூறியுள்ளார்.

தனது கருத்து சர்ச்சையானதும், “தனிப்பட்ட முறையில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என முல்லப்பள்ளி ராமசந்திரன் கூறியுள்ளார்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *