Share on Social Media


உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், யார், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற பரபர வாதம் வலுத்துவருகிறது. இந்தநிலையில், ‘காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கும்’ என்று செய்திகள் பரபரக்கவே… தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்தேன்….

”கடந்த சட்டமன்றத் தேர்தலில், கூட்டணியோடு ஏற்பட்ட மனக் காயத்தினால்தான், உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள தயாராகிவிட்டீர்களோ?”

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

”உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போகிறது என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. பத்திரிகைகள்தான் செய்தியை திரித்துப் போட்டுவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், ‘எண்ணிக்கை முக்கியம் இல்லை; எண்ணம்தான் முக்கியம்’ என்பதில் ராகுல்காந்தி தெளிவாக இருந்தார். அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ‘தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க ஆட்சி அமையவேண்டும்’ என்று ஏற்கெனவே தான் கொடுத்திருந்த சத்தியத்தை நிறைவேற்றியிருக்கிறார் ராகுல்காந்தி. எனவே, எங்களுக்குள் எண்ணிக்கைப் பிரச்னையும் இல்லை; எந்த மனக் காயமும் இல்லை!”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *