Share on Social Media


சண்டிகர்:பஞ்சாபில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது.
பஞ்சாபை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதை ஹர்பஜன் சிங் மறுத்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, ‘டுவிட்டரில்’ ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டார். ‘ஷைனிங் ஸ்டார் பாஜியுடன்’ என, சித்து குறிப்பிட்டுள்ளார்.இதனால், ஹர்பஜன் சிங் காங்கிரசில் இணைய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.