Share on Social Media


நம்ம கட்சியிலிருந்து ஒருத்தர் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த ஒரு ஓட்டு தான் தி.மு.க மாவட்ட சேர்மனா… அ.தி.மு.க மாவட்ட சேர்மனா… என்று தீர்மானிக்கணும். ஆனா, இவர் இரண்டு பக்கமும் காசு வாங்கிட்டார். அதிகமில்லை, ஒரு 75 லட்சம் ரூபாய்க்கு சோரம் போய்விட்டார். இப்போ அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். நாம் நாளுக்கு நாள் பலம் பெறுகிறோமா… பலவீனம் அடைகிறோமா.. என்பது தான் முக்கியம். பலவீனம் அடைகிறோம் என்றால் நாம் இந்த கட்சியை தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை.

‘என் உயிரே போனாலும், கொள்கை பிடிப்போடு இருப்பேன். அடுத்தவன் காசுக்கு சோரம் போகமாட்டேன்’ என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும். அப்படித்தானே உங்களை பழகி, வளர்த்து, பயிற்சி கொடுத்திருக்கிறேன். எல்லாம் பழங்கதை ஆகி விட்டதே..!

பழைய சோறு கூட சாப்பிட இன்பமாக இருக்கும். ஆனா இந்த கதை பலவீனமான கதை. இந்த நிலையோடு நாம் கட்சி நடத்த வேண்டுமா..?

ராமதாஸ், அன்புமணி

ராமதாஸ், அன்புமணி
விகடன்

தமிழகத்தில் 36 – 40 கட்சிகள் இருக்கிறது. அதில் நாம் ஒரு கட்சியா? பெருமையாக சில சமயம் சொல்லிக்கொள்கிறோம், மூன்றாவது பெரிய கட்சி என்று. ஆனால், ‘ஊராட்சி மன்ற தேர்தலில் நிற்க வைக்ககூட ஆள் இல்லை ஐயா!’ என்கிறோம். இது தமிழகம் முழுவதும் பா.ம.க-வில் நடந்ததுதான். இந்த தமிழக மக்களுக்காக நாம் போராடாடது ஏதேனும் உண்டா! நம் கட்சியில் உள்ளது போல அன்புமணியின் இளைய தம்பி, தங்கைகள் வேறு ஏதேனும் கட்சியில் உள்ளனரா?, பின் ஏன் நாம் வளரவில்லை?இதை நாம் எப்போது சரி செய்யப்போகிறோம். இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களிடமிருந்து பதிலை பெற நினைக்கிறேன். வீடுவீடாகச் சென்று நீங்கள் திண்ணைப் பிரசாரம் செய்யவில்லை என்றால்… சமூக ஊடகங்கள் வாயிலாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லை என்றால்… இந்த கட்சியை நடத்தி பயனில்லை. ஏனெனில், காசுக்கு சோரம் போனவர்கள் எந்த காலத்திலும் அவர் காட்டிக் கொடுப்பார்கள். கொள்கை பிடிப்பு என்பது அவன் வாயளவில் மட்டுமே தான் அவனிடம் இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் செஞ்சியில் ராஜேந்திரனை வேட்பாளராக நிறுத்தினோம். அந்த தொகுதியில் நாம் இருமுறை வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், அவர் அங்கு தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இனிமேல் அந்த தவறுகள் நடக்க கூடாது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *