Share on Social Media


”மேகதாது அணை கண்டிப்பாக கட்டியே தீருவோம். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால், அது குறித்து எங்களுக்கு கவலையில்லை,” என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடக மாநில அரசு பிடிவாதமாக உள்ளது. அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி தரும்படி வலியுறுத்தினார். இதற்கிடையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீர் வழக்கம்போல் வழங்கப்படும். கூடுதல் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. மேகதாது அணையை கண்டிப்பாக கட்டியே தீருவோம். கர்நாடக மக்கள் நலன் கருதி இத்திட்டம் செயல்படுத்தப்படும். பிரதமரும், மத்திய அமைச்சரும் விரைவில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கட்டும்; வேண்டுமானால் உணவு சாப்பிடட்டும். எங்களுக்கு சம்பந்தமும் இல்லை; கவலையுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


– நமது நிருபர் –

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *