dummy noimg Tamil News Spot
Share on Social Media

.புதுச்சேரி : துப்புரவு பணி மேற்கொள்ளும் சுவட்சதா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும் கவர்னருக்கு தொடர்பு உள்ளது என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கவர்னர் மாளிகையில் புரோக்கர் ஆதிக்கம் உள்ளது என ஏற்கனவே புகார் கூறியுள்ளேன். இதற்கு கடவுள் பார்த்துக்கொள்வார் என கூறிவிட்டார். துப்புரவு பணி மேற்கொள்ளும் சுவட்சதா கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு தொடர்பு உள்ளது. 58 வயதிற்கு மேற்பட்டவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த கூடாது என விதி உள்ளது.ஆனால் இந்த நிறுவனத்தில் முதியவர்கள் தான் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு மட்டும் நிதியை கவர்னர் நிறுத்துவது கிடையாது. அப்படி என்றால், எந்த அளவில் புரிதல் உள்ளது. நான் சொல்வது பொய் என்று கவர்னரை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்.
என் மீதும் ஏதாவது தப்பு இருந்தாலும் கவர்னர் கூறட்டும். சி.பி.ஐ.,க்கு கூட புகார் அனுப்பட்டும். எனக்கு கவலையில்லை.கனமழை காரணமாக ஏனாம் மக்கள் மூன்று நாட்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆனால் அதிகாரிகள் துாங்குகின்றனர். மொபைல்போனை சுவிச் ஆப் செய்துவிட்டனர். ஏனாமிற்கு எதுவும் செய்யக்கூடாது என கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க அனுமதிகோரி, கவர்னருக்கு கடிதம் அனுப்ப உள்ளேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை கிரண்பேடி வீணடித்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *