Tamil News large 2633883 Tamil News Spot
Share on Social Media

மும்பை : ‘மஹாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரியை திரும்ப அழைக்க வேண்டும்’ என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு, சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இதனால், கோவில் வழிபாட்டுக்கு, மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

latest tamil news

இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி எழுதிய கடிதத்தில், ‘திடீரென மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா’ என, கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே, ‘ஊரடங்கை திடீரென அமல்படுத்தியது சரியானது அல்ல. ‘அதேபோல், ஒரே நேரத்தில் அனைத்திற்கும் தளர்வுகள் அளிப்பது, நல்ல விஷயம் அல்ல. ‘என் ஹிந்துத்வா கொள்கைக்கு, நீங்கள் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை’ என, கூறியிருந்தார்.

இந்நிலையில், சிவசேனா கட்சி பத்திரிகையான, ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கவர்னர் மாளிகையை, பா.ஜ., தன் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கில், கோவில்களை திறந்தால், மக்கள் கூட்டத்தை கட்டுப் படுத்துவது எளிதல்ல. வழிபாட்டு தலங்களை திறக்க, பா.ஜ., விரும்பினால், அதற்கான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும். ஏனெனில், நாட்டில் பல முக்கியமான கோவில்கள் இன்னும் திறக்கப்படவில்லை.மகிழ்ச்சியான சூழலில் தான், கோவிலுக்கு மக்கள் செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில், அரசியல் கட்சி தலைவர் போல் செயல்பட்டுள்ள கவர்னரை, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், திரும்ப அழைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேசியவாத காங்., மூத்த தலைவரும், மாநில வீட்டுவசதி துறை அமைச்சருமான ஜிதேந்திரா ஆவ்ஹாட் கூறியிருப்பதாவது:கோவாவில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கும், கோஷ்யாரி தான் கவர்னராக உள்ளார்.
கோவாவிலும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு கோவில்களை திறக்கும்படி, கோவா முதல்வருக்கு, கவர்னர் கடிதம் எழுதுவாரா?இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *