Share on Social Media


அடையாறில் முன் எப்போதும் இல்லாத வகையில், இம்முறை வெள்ளம் ஏற்பட்டதற்கு வடிகால்கள் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் இணைப்பு பகுதிகள் முறையாக கட்டமைக்கப்படாதது தான் காரணம் என தெரியவந்துள்ளது.

அடையாறு மண்டலம், 175வது வார்டில், நேரு நகர், பக்தவச்சலம் நகர், கஸ்துாரிபாய் நகர், இந்திரா நகர், தனலட்சுமி அவென்யூ, காமராஜர் அவென்யூ, அண்ணா அவென்யூ பகுதிகளில் 45க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்த தெருக்கள், அடையாறு, எல்.பி., சாலைக்கும், பகிங்ஹாம் கால்வாய்க்கும் இடையே உள்ளன. மழைநீர் பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் வகையில், தெருக்கள் நீரோட்ட பரப்பில் உள்ளன.இருந்தாலும், அனைத்து தெருக்களிலும் 2010ம் ஆண்டு வடிகால் புதுப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பே வடிகால்கள் உள்ளன. மழைநீர், வடிகால்களில் கிழக்கில் இருந்து மேற்கு திசை நோக்கி சென்று, பகிங்ஹாம் கால்வாயில்விழ வேண்டும்.ஆனால், கிழக்கில் இருந்து வரும் மழைநீர், வடக்கு திசை நோக்கி சென்று, சர்தார் பட்டேல் அணுகு சாலை வழியாக, மீண்டும் மேற்கு திசை நோக்கி சென்று, பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.இதற்கு ஏற்ப வடிகால் கட்டமைப்பும் உள்ளது. இந்த வகையில், 45 தெருக்களில் இருந்து வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாயில் இணையும் பகுதி தரை மட்டத்தில் உள்ளது. இது, 1960ம் ஆண்டு கட்டப்பட்டது.சாலை மட்டம் மற்றும் வடிகால் கட்டமைப்பை கணக்கிட்டு, இந்த இணைப்பை கட்டமைக்கவில்லை. கால்வாயில் அதிகளவு வெள்ளம் செல்லும் போது, இணைப்பு பகுதி மூழ்கி, வடிகால்களில் நீரோட்டம் தடைபடும்.இந்த பிரச்னை, 2015ம் ஆண்டு மழைக்கு பின் அதிகமாக உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையில், அனைத்து தெருக்களிலும் வெள்ளம் தேங்கியது.

நீரை வெளியேற்ற 14 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. வடிகால்கள் துார் வாராதது, தொடர்ச்சி இல்லாததும் வெள்ளம் தேங்க மற்றொரு காரணம். எல்.பி., சாலையின் மேற்கு திசையில் உள்ள வடிகால்களில் வடியும் வெள்ளம், நேராக பகிங்ஹாம் கால்வாயில் விழ வேண்டும். மத்திய கைலாஷ் முதல் இந்திரா நகர் வரை உள்ள, 1.5 கி.மீ., நீள பகிங்ஹாம் கால்வாயில், ஒரு இடத்தில் மட்டும் தான் இந்த இணைப்பு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, 1.5 கி.மீ., இடைப்பட்ட பகுதியில், எட்டு இடங்களில் இணைப்பு வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு, பகிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்ததால், அந்த கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.ஓரிடத்தில் உள்ள, 1960ம் ஆண்டு கட்டிய இணைப்புக்கும், வடிகால்கள் மட்டத்திற்கும் இடையே, 12 அடி இடைவெளி உள்ளது.வடிகால் மட்டத்தில் இணைப்பு அமைத்திருந்தால், தெருக்களில் வெள்ளம் தேங்குவது தடுக்கப்படும். இதையடுத்து, அடையாறில், எப்போதும் இல்லாத வெள்ள பாதிப்பு ஏன் என, மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.இதில், வடிகால்களை திசை மாறி கட்டமைத்தது, தொடர்ச்சி இல்லாதது, ஐந்து ஆண்டுகளாக துார் வாராதது, கழிவுநீர் கலப்பு, முறையாக கட்டமைக்காத இணைப்பு பகுதிகள் போன்ற பிரச்னை இருப்பது தெரிந்தது.இது குறித்து, கமிஷனர் பார்வைக்கு கொண்டு செல்ல, விரிவான ஆய்வு அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

அடுத்த ஆண்டு பருவமழைக்கு முன், நீரோட்ட பாதையில் வடிகால்களை கட்டமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, இணைப்பு கட்டமைப்புக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.கடந்த 2015ம் ஆண்டுக்கு பின், கடந்த மாதம் பெய்த மழைக்கு தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மழை நின்றும், மோட்டார் கொண்டு வெள்ளத்தை வடிய செய்ய, ஐந்து நாட்களுக்கு மேல் ஆனது.கடந்த 2016ம் ஆண்டுக்கு பின், வடிகால்கள் துார் வாரவில்லை.

பல வடிகால்களில், கழிவுநீர் தான் ஆறாக செல்லும். மணல் பரப்பில் வடிகால் கட்ட பல நுாறு கோடி ரூபாய் செலவு செய்ய தயாராக இருந்த மாநகராட்சி 1 கோடி ரூபாய் செலவு செய்திருந்தால், அடையாறில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தடுத்திருக்க முடியும்.நலச்சங்க நிர்வாகிகள், அடையாறுஎல்.பி., சாலையில் மேற்கு திசையில், எப்போதும் இல்லாத வெள்ள பாதிப்பு இருந்தது. வடிகால்கள், பகிங்ஹாம் கால்வாய் இணைப்பை முறையாக கட்டமைக்காதது தான் பாதிப்புக்கு காரணம். அனைத்து தெருக்களும் கள ஆய்வு செய்யப்பட்டன. கடந்த காலத்தில் செய்த சில தவறுகள், இனிமேல் நடக்காத வகையில், கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி அதிகாரிகள்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.