Share on Social Media


அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும்…

“வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் விடுபட்ட மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்ந்து இடம்பெறுமா?”

“அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அதனால் எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான நாள் வரும்போது அதுகுறித்து பேசலாம்”

“மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களை சில மாநிலங்களுக்கு கவர்னர்களாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?”

“நம்முடைய மத்திய அரசின் பரிந்துரையின்படி குடியரசுத்தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது? சமீபத்தில் நமது அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடந்தது. அதில் சிலர் கவர்னர்களாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் மூத்த அமைச்சர்களாக இருக்கிறார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை”

“கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குவதுடன், அதற்கு அடிக்கல் நாட்ட வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்?”

“தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க இருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு மிகத் தெளிவாக இருக்கிறது. நம்முடைய மாநில அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் ஒருசொட்டு அளவு குறையக் கூடாது என்றும் மேக்கேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறோம். அதேபோல மேக்கேதாட்டு அணையில் 69 டி.எம்.சி தண்ணீர் தேக்குவோம் என்று அவர்கள் கூறுவது ஏற்புடையது கிடையாது. தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வர வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. கட்டினால் தமிழகத்திற்கு பிரச்னை வரும் என்பது எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *