Share on Social Media

CELAF – The Common Educational Loan Application Form என்பதன் சுருக்கமே CELAF.

இந்த ஒரே விண்ணப்பத்தை பூர்த்திசெய்வதன் மூலம் பல வங்கிகள் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்க இயலும். இந்திய வங்கிகள் சங்கமான IBA-வின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பப் படிவம் இது.

இதில் பார்த்து விவரங்களுடன் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, கடைசியாக பெற்ற மதிப்பெண்கள் பற்றிய விவரம், பெற்றோரின் பான் விவரங்கள் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை (Current Status) வங்கி புதுப்பிக்கும். விண்ணப்பதாரர்கள் அவர்களின் விண்ணப்பத்தின் தற்போதைய ஸ்டேட்டஸைக் காணலாம்.

கிளை மேலாளர் அந்தஸ்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு, கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரம் இல்லை. பிராந்திய மேலாளர் (Regional Manager) அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே தகுந்த காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரம் உண்டு.

மாணவர்களிடமிருந்து இன்னும் சில தகவல்கள் அல்லது ஆவணங்கள் தேவைப்படும்போது வங்கிக் கிளை கடன் விண்ணப்பத்தை நிறுத்தி ஹோல்டில் வைக்கும்.

எதனால் விண்ணப்பம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்றார் போல விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களை, ஆவணங்களைக் கொடுப்பதன் மூலம் விண்ணப்பத்தை அடுத்தகட்டத்திற்கு நகரச் செய்யலாம்.

கடனுக்கு விண்ணப்பிக்கும் சிக்கல்களைக் களைந்து அதை எல்லோருக்கும் சென்றடையும்படியாக எளிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட வித்யாலட்சுமி இணையதளத்தின் மூலம் கடன் பெறுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

பொதுவாக எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டு, விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்படும் காலதாமதம். பல வங்கிகள் இருந்தாலும் எல்லா வங்கிகளும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பரிசீலித்து பதில் அளிப்பதில்லை. இதில் விண்ணப்பித்தாலும் பல சமயங்களில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிய சம்பந்தப்பட்ட வங்கிக்கிளைக்குத்தான் போக வேண்டியுள்ளது.

`பிள்ளையின் படிப்பிற்காக செருப்புத் தேய அலையாய் அலைந்தேன்’ என்ற குரல்களை குறைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்ட இணையதளம், மக்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளை கலைந்து அதன் மூலம் அதை எல்லோருக்குமானதாக விரைவில் மாற்ற வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *