Share on Social Media

மற்ற பூஞ்சை பாதிப்புகளைப் போலவே, மஞ்சள் பூஞ்சையும் மாசடைந்த சுற்றுச்சூழலில் அதிகம் பரவியிருக்கும். பொதுவாக, அப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் வளரக்கூடிய பூசனங்களை ஒரு நோயாளி மோந்தால் அவருக்குப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மஞ்சள் பூஞ்சையைப் பொறுத்தவரை, காற்றிலிருக்கும் அதீத ஈரப்பதத்தின் வழியாகவும் பழைய, அழுகிய உணவுகளில் இருந்தும்கூட மக்களுக்குப் பரவக்கூடும். ஆகவே, சுகாதாரமற்ற பகுதிகளும் மாசடைந்த சூழலும் மஞ்சள் தொற்று பாதிப்புகள் முதன்மைக் காரணங்களாக அறியப்படுகின்றன.

மஞ்சள் பூஞ்சை மட்டுமன்றி, பொதுவாகவே பூஞ்சைத் தொற்றுகள் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாகவுள்ள மக்களை எளிதில் பாதிக்கலாம் என்று சொல்லப்பட்டாலும்கூட, கோவிட்-19 தொற்றுநோயைப் போல அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது என்றும் சொல்லப்படுகிறது.

Patient/ Representation Image

Patient/ Representation Image
AP Photo / Jae C. Hong

இதுகுறித்துப் பேசிய தொற்றுநோய் மருத்துவரான சுந்தர் ராமன், “மஞ்சள் பூஞ்சை பற்றிய விவரங்கள் போதுமான அளவுக்கு இன்னும் நமக்குத் தெரியவில்லை. மேலும், உடலில் மிகவும் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இது எளிதில் பாதிக்கக்கூடும். மேலும், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருப்போருக்கும் இது பாதிக்கக்கூடும். மேலும், மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே நாம் இருப்பதால் இன்னும் முழுமையான விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. இதுவரை கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதுவேதான், இதற்கும் அளிக்கப்படுகிறது” என்று கூறினார்.

மேலும், கோவிட் தொற்றுக்கு ஆளாகி, குணமடைந்தவர்களிடையே, அல்லது குணமடைந்து கொண்டிருப்பவர்களுக்கு இடையே, அதிகம் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு ஆளாகி, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவி பெற்றவர்களுக்கும் ஸ்டீராய்டு அதிகம் பயன்படுத்தியவர்களுக்கும் இது அதிகமாக பாதிப்பது தெரியவந்துள்ளது. ஒரு சிறிய கீறல், வெட்டு, தீக்காயம் ஆகியவற்றின் மூலமாக சருமத்தில் இருந்து உடலுக்குள் இது பரவக்கூடும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *