Share on Social Media


பெங்களூரு-கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்யும் விஷயத்தில், நாளுக்கொரு அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

அனைவரும், வரும் 26ல் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கர்நாடக அமைச்சரவை கூடுகிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. அந்த வயதுக்குரிய உடல் நல குறைபாடுகள் அவருக்கு உள்ளன. எனினும், அவர் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சிறப்பான முறையில் நிர்வாகம் செய்கிறார்.எனினும், அவரின் எதிர்ப்பாளர்கள் மற்றும் கட்சியில் உள்ள சில அதிருப்தியாளர்கள், அவரை பதவியிலிருந்து இறக்குவதற்கு தொடர்ந்து முயற்சிக்கின்றனர். எனினும், பா.ஜ., மேலிடம் அதை கண்டுகொள்ளவில்லை.ஆனால், கடந்த சில நாட்களாக, ‘முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்கிறார்’ என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது. எதிர்ப்பு அதிகரித்து வருவதால், அவரும் பதவியிலிருந்து விலக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன், தன் இளைய மகன் விஜயேந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்.நிபந்தனை என்ன?இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால், தானாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்து, அடுத்த முதல்வரை அவரே சொல்லவும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு, கட்சி தலைமை மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், மாநிலத்தின் முக்கிய மடாதிபதிகள் எடியூரப்பாவை தொடர்ந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.’எந்த காரணத்துக்கும் அவரை பதவியில் இருந்து இறக்கம் செய்யக் கூடாது. இந்த ஆட்சி காலம் முடியும் வரை முதல்வராக தொடர வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில், அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்துள்ளனர்.கூட்டங்கள் ரத்துஇதற்கிடையில், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசிக்க, வரும் 25ல் கூட்டப்பட்டிருந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு பதில், அன்றைய தினம் இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று அதுவும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.அமைச்சரவை கூட்டம்இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கர்நாடக அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில், எத்தனை அமைச்சர்கள் பங்கேற்பர்; ராஜினாமா குறித்து விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுஉள்ளது.எப்படியாகிலும் இன்று ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வரும் 26ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதால், அன்றைய தினம் எடியூரப்பா, முக்கிய முடிவை அறிவிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.அதுவரை இந்த அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. அவர் பதவியை ராஜினாமா செய்யும்பட்சத்தில், தங்கள் அமைச்சர் பதவி பறிபோய்விடுமோ என்று, முதல்வரின் ஆதரவாளர்கள் திக்… திக் மன நிலையுடன் இருக்கின்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *