Share on Social Media


மைசூரு-“கர்நாடக காங்கிரசில், உட்கட்சி பூசல் இருப்பது உண்மைதான். கட்சியில் தனிப்பட்ட முறையில், பல விஷயங்கள் இருக்கும். அதை நாங்கள் சரி செய்து கொள்வோம்,” என காங்., – எம்.எல்.ஏ., யதிந்திரா தெரிவித்தார்.கர்நாடகாவில் அடுத்த முதல்வர் பதவிக்கு அடி போட்டு வரும் சித்தராமையா மகன் யதிந்திரா, தற்போதைய சூழலில் அமைதியாக இருந்தார்.இந்த வேளையில், மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:அனைத்து கட்சிகளிலும், பல்வேறு தலைவர்களின் விசுவாசிகள், அவரவர் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பர். அதற்காக கருத்து வேறுபாடு இருப்பதாக அர்த்தமல்ல.கட்சி விஷயம் என வரும் போது, அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். ஒன்றாகவே தேர்தலை சந்திப்போம்.எம்.எல்.ஏ.,க்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு, முக்கியத்துவம் தரத் தேவையில்லை. இந்த விஷயத்துக்கு, இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஜமிர் அகமது, ‘அடுத்த முதல்வர் சித்தராமையா’ என கூறுவதால், தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடாது என்பதால், சிவகுமார் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.ஊடகத்தினர் தேவையற்ற குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், சிவகுமார் பேசினார்.கட்சி விஷயம் என வரும் போது, மாநில காங்கிரஸ் தலைவரே ‘சுப்ரீம்’ ஆக இருப்பார்.இது குறித்து பரமேஸ்வர் கூறியதில் தவறில்லை.கர்நாடக காங்கிரசில், உட்கட்சி பூசல் இருப்பது உண்மை தான். கட்சியில் தனிப்பட்ட முறையில், பல விஷயங்கள் இருக்கும். அதை நாங்கள் சரி செய்து கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *