Share on Social Media


பெங்களூரு,-”பா.ஜ.,வில் தலைமை மாற்றத்துக்கு பின் ஏற்படக்கூடிய அரசியல் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, அரசு அமைக்கும் முயற்சியில் இறங்க வேண்டாம்,” என, கர்நாடக தலைவர்களுக்கு, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்து, ஜூலை 26ல் இரண்டாண்டு நிறைவடைகிறது. அதன்பின் முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வார். மாநிலத்துக்கு புதிய முதல்வர், ஆட்சிக்கு வருவார் என, சில நாட்களாக ஊடகங்களில், செய்தி வெளியாகிறது.எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதற்காக, காங்., மற்றும் ம.ஜ.த., விலிருந்து, பா.ஜ.,வுக்கு வந்த, 17 பேரில் சிலர், முதல்வரின் ராஜினாமாவுக்கு பின், தங்களின் பழைய கட்சிக்கு திரும்ப ஆர்வமாக உள்ளனர். அப்படி நடந்தால் பா.ஜ., அரசு கவிழ்வது உறுதி.இதற்கு முன், காங்கிரஸ் – ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழ்ந்த போது, நடந்த கட்சித்தாவல் இப்போது நடந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது.அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், ஆட்சியை கைப்பற்ற காங்., தலைவர்கள் ஆலோசிக்கின்றனர். டில்லிக்கு சென்றிருந்த சில தலைவர்கள், கட்சி மேலிடத்துடன் விவாதித்துள்ளனர்.இதற்கு காங்., மேலிடம் சம்மதிக்கவில்லை. கர்நாடகாவில் ஏற்கனவே, இரண்டு முறை கூட்டணி அரசு அமைத்து, கையை சுட்டுக்கொண்டோம். பெரும்பான்மை இல்லாமல், வேறு கட்சிகளிலிருந்து வரும் எம்.எல்.ஏ.,க்களை நம்பி, அரசு அமைக்க முயற்சிக்க வேண்டாம்.மாநிலத்தில் எந்த நேரத்தில், தேர்தல் நடந்தாலும், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே ஒன்றரை ஆண்டு ஆட்சிக்கு ஆசைப்பட்டு, பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பை, கைவிட வேண்டாம், என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *