Share on Social Media


பெங்களூரு: கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏதும் இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. எடியூரப்பா எதிர்ப்பாளர்கள், விரைவில் முதல்வர் மாற்றம் செய்யப்படுவார் என பேசி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் எந்த அரசியல் குழப்பமும் இல்லை. ஒரு சிலர் மீடியாவில் முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதேதோ கூறி வருகின்றனர். ஆரம்பம் முதலே, அவர்கள் இதனை செய்து வருகின்றனர். அவர்களை, கட்சி மேலிட பொறுப்பாளர் சந்திக்கவில்லை. இதனால், எந்த குழப்பமும் இல்லை. அமைச்சர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஏதேனும் பிரச்னை இருந்தால், அது குறித்து பேசி தீர்க்கப்படும். பா.ஜ., எம்எல்சி விஸ்வநாத்தின் கருத்து குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஆலோசிக்க உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. அரசியல் விவகாரம், வெள்ளம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். கோவிட் 3வது அலை, ஊரடங்கு தளர்வு குறித்தும் ஆலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *