Share on Social Media


புதுடில்லி : பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்தார்பூர் சாஹிப் செல்வதற்கான பாதை ,(நவ. 17) திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இப்புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்புர் வரை பாதை போடப்பட்டுள்ளது. இப்பாதையை சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக பாதை மூடப்பட்டது.

குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்பாதை மீண்டும் எப்போது திறக்கப்படும் என சீக்கியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
இது தொடர்பாக இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (நவ.16) கூறியது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு சீக்கிய யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் கர்தார்பூர் சாஹிப் பாதையை மீண்டும் நாளை ( நவ. 17-) திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *