Share on Social Media


பிறகு, மூன்று மணி நேரம் கழித்து காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து, அதன் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த விவரங்களைக் காண்பித்தார். அந்த விவரத்தில், தண்ணீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, மோட்டார் சரிசெய்து, குழாய் அமைத்து, தண்ணீர் கொண்டு செல்வதற்காக, ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ. 2,50,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதனால், போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். வாளாந்தூர் கிராமத்தின் சுடுகாட்டில் அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்ய வைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். மனிதன் கடைசியாக போய் சேரும் இடம் சுடுகாடுதான். அந்த சுடுகாட்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களை ஏமற்றுகிறார்கள். எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது என்று மறைத்து, அதில் முறைகேடு செய்ய நினைக்கின்றனர்.

நாங்கள் தர்ணா போராட்டம் நடத்தியதும், எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுங்கிற விவரத்தை காண்பித்தனர். அதில் ஒரு ரூபாய்கூட முறைகேடு செய்ய விடமாட்டோம்” என தெரிவிக்கிறார் அவர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *