Share on Social Media


இதுகுறித்து பேசிய, தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் கருப்பையா, “கடந்த 2009 – ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, நிலங்கள் கையகப்படுத்தி சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டிக் கோட்டை மதுக்கான் தனியார் சுங்கச்சாவடி அருகே, தெத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்குச் சொந்தமான ஸ்ரீபெருமாள் சுவாமி திருக்கோயில் குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். அந்த கோயிலை இடிக்கும்போது, மாற்று இடத்தில் கோயில் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், 2009 இறுதியில் இடிக்கப்பட்ட இக்கோயில் மீண்டும் அம்மக்களுக்கு கட்டி கொடுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து, மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் கோயிலைக் கட்டித்தரவில்லை.

கருப்பையா

கருப்பையா
நா.ராஜமுருகன்

இதனால், விடுதலை இயக்கம் சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் கோயில் அமைக்க ஒண்ணேமுக்கால் சென்ட் இடத்தை ஒதுக்குவதாக தெரிவித்திருக்கிறது. ஆனால், எங்கே இடம் எங்கே ஒதுக்குகிறார்கள் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. அதோடு, எழுத்துபூர்வமாகவும் இன்னும் தெரிவிக்கலை. எழுத்துபூர்வமாக அந்த இடத்தை ஒதுக்குவதற்கான அனுமதியைத் தெரிவித்து, மாற்று இடத்தில் கோயில் அமைய அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சுங்கச்சாவடியில் அமர்ந்து, கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனமும் செல்லாதவாறு மறித்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *