Share on Social Media


தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் சென்றிருந்தார். மக்கள் மத்தியில் பேசியபோது, தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். `ஐந்து வருடங்களில் இரண்டு சின்னங்களில் போட்டியிட்டு வென்ற ஒரே எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிதான். காலத்துக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தி செந்தில் பாலாஜி’ என்றார்.

வேலைவாய்ப்பு முகாம்

இந்தநிலையில், முதல்வருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறா செந்தில் பாலாஜி. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, கரூர் திருக்காம்புலியூரிலுள்ள தனியார் பள்ளியில், செந்தில் பாலாஜி ஃபவுண்டேஷன் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

Also Read: `தி.மு.க ஆட்சியில் 220 டெண்டர் முறைகேடுகள்; ஆதாரம் இருக்கிறது!’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அந்த முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி மாணவி பானுமதியின், ’ஹோப் ஆஃப் கரூர்’ என்ற இணையதளத்தைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி,

“இந்த அரசு, மத்திய அரசின் அடிமை அரசாகச் செயல்படுகிறது. நமது மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டது. மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறியது. ஆனால், தற்போது இர்ண்டு கோடிப் பேர் வேலையிழக்கும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. மாநில அரசோ காலியாக இருக்கும் லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்காமல், நெடுஞ்சாலைத்துறையில் எட்டுவழிச் சாலை அமைக்கும் பணியில் கவனம் செலுத்திவருகிறது. ஏனென்றால், அதில் கமிஷன் நிறைய கிடைக்கும் என்ற பேராசைதான். வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

velaivaaippu mukam Tamil News Spot
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள்

அப்போது, அனைவருக்கும் அரசு வேலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வருவதால், விளம்பரங்களுக்காக ரூ. 250 கோடியைச் செலவு செய்திருக்கிறார் முதலமைச்சர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்வதைச் செய்யும், ஜெராக்ஸ் முதல்வராக இருக்கிறார். நமக்கு ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம். ஒரிஜினல் முதல்வராகச் செயல்படும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையே முதல்வராகத் தேர்ந்தெடுப்போம். இங்கு சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் இருக்கிறார்கள். அடுத்தவர் உழைப்பில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள். சொந்த உழைப்பில் முன்னேறுவதுதான் நிரந்தரம். அடுத்தவர் உழைப்பில் முன்னேறுவது கானல் நீராக முடியும். எடப்பாடி பழனிசாமியின் நிலைமை கானல் நீராகும்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *