Share on Social Media


ஆனால், சந்திரபாபுவின் இந்தக் கருத்துக்களுக்கு உடனடியாக நடிகையும், நகரி எம்.எல்.ஏ-வுமான ரோஜாவிடம் இருந்து பதில் வந்தது. அவர் பேசும்போது, “விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாக கணக்குப் பார்த்துத் தீர்த்துவிடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்கச் செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். அதனால் தான் சொல்வார்கள் ‘நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பும் என்று’ தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டார்கள் என கலங்கும் நீங்கள்தான் அதிகாரத்தில் இருந்தபோது ‘ரோஜா, ப்ளூ ஃபிலிமில் நடிக்கிறார்’ என சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா, பிள்ளைகள் இல்லையா?

அதிகாரத்தில் இருந்த போது அனைவரையும் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்கள். விஜயா அம்மா, ஷர்மிளா அம்மா (ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி) குறித்து நீங்கள் பேசியதை யாரும் மறந்து விடவில்லை. இந்த நிலையில் உங்கள் போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்குத் திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் உங்கள் சபதம் தான். பை, பை பாபு” எனப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆந்திரமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, “சந்திரபாபு நாயுடு விரக்தியில் இருப்பது ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் தெரியும். காரணம், அவரது தொகுதிக்கு உட்பட்ட குப்பம் மாநகராட்சியிலே அவர் கட்சி தோல்வியைத் தழுவியிருக்கிறது. மக்கள் தொடர்ந்து அவரை நிராகரித்து வருகிறார்கள். அதனால் தான், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அவர் நடவடிக்கைகள் இருக்கின்றன. சட்டசபையில் அவர்தான் தேவையில்லாத விஷயங்கள் குறித்துப் பேசினார். அதற்கு எதிர்வினை வரும்போது இப்படி நடந்துகொள்கிறார். அவர் குடும்பத்தினர் குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. அவைக்குறிப்பில் அது தெளிவாக இருக்கிறது” என விளக்கமளித்திருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *