Share on Social Media



ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்காக மக்களை சுரண்டுவதை குறிக்கும் வகையில் சிலிண்டருக்கு நாமம் போட்டு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பத், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட செயலாளர் கோபால் கண்டன உரையாற்றினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *