Share on Social Media


‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்த கமல், படம் பார்த்த சூட்டோடு சூடாக அதில் நடித்தவர்களையும் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டிப் பேசினார். அப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் சேர்ந்து பண்ணலாம் என தன் விருப்பத்தையும் கமல் தெரிவித்தாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் கமல் பிறந்தநாளுக்கு ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தபோதுதான் இந்தக் கூட்டணி உறுதியானது. பா.ரஞ்சித் தற்போது காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இன்னும் 12 நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். மூன்று கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீண்டும் டிசம்பரில் அடுத்த ஷெட்யூல் நடக்கிறது.

கமல் - லோகேஷ்கனகராஜ்

கமல் – லோகேஷ்கனகராஜ்

இப்படத்தை முடித்துவிட்டு கமல் அடுத்ததாக ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் எனப் பேச்சு எழுந்திருக்கிறது. மற்றொருபுறம் ஷங்கர் ராம்சரண் படத்தை முடித்துவிட்டால் `இந்தியன்-2′ படப்பிடிப்பைத் தொடங்கும் சூழல் ஏற்படலாம். இப்போதைக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ வேலைகளில்தான் ரஞ்சித்தின் முழுக்கவனமும் இருக்கிறதாம். ரஞ்சித் அடுத்து விக்ரமை இயக்குவது உறுதியாகி இருப்பதால், அதன் படப்பிடிப்புக்கான திட்டங்களும் இன்னொரு புறம் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். விக்ரம் இப்போது ‘கோப்ரா’, ‘மகான்‘ என படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். எனவே ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை அடுத்து அவர் இயக்கப்போவது எந்தப் படம் என்பது அடுத்த மாதம் ஃபைனல் ஆகிவிடும் என்கிறார்கள்.

இதற்கிடையே இந்தியிலும் இருந்து ரஞ்சித்திற்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே அங்கே இயக்கி வரும் ‘பிர்சா முண்டா’ பட வேலைகளுக்காக சென்ற வாரம் மும்பை சென்று திரும்பியிருக்கிறார் என்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *