Share on Social Media


சமூகப் பணி செய்வதற்கு அரசியல் அதிகாரம் (Political Power) தேவையில்லை என்பதை உங்கள் மனசாட்சி அறியும். உங்களுக்குள் அரசியல் எப்போதோ வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அரசியல் ஆலமரத்தின் ஆணி வேரைப் பார்த்தவர்கள்.. இனி அத்தனை சுலபத்தில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் தங்களுக்கோ தங்கள் கட்சிக்கோ அரசியலில் சாதிக்க வாய்ப்புகள் அதிகமில்லை எனும்போது ‘மக்கள் நீதி மய்யம்’ இனி ‘மக்கள் நற்பணி மய்யம்’ என்று மாற வேண்டியது காலத்தின் காட்டாயமாகலாம். அரசியல் கட்சி என்கிற அடிப்படையில், தங்களிடம் இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு (தாங்கள் உட்பட) பதவி மற்றும் அதிகார ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதையே நற்பணி மய்யமாக மாற்றும் போது இந்த அதிகார போதை தானாக மாறும்.

எந்த ஆதாயமும் எதிர்பாராமல் சமூகப் பணியாற்ற, தங்களின் உண்மையான விசுவாசிகளைக் கண்டறிந்து ஒரு தொகுதிக்கு ஆயிரம் பேரில்லையென்றாலும் – ஒரு நூறு பேரைத் தேர்ந்தெடுங்கள் போதும்.. தன்னலமற்ற சமூகப் பணி மேற்கொள்ளுங்கள்.. தங்களின் சினிமா தொழிலையும் தொடர்ந்து, தங்கள் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும், சந்தோசமும் உற்சாகமும் தாருங்கள். தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியோ அல்லது பெரும் பகுதியோ சமூகப் பணிக்கு கொடுங்கள். தங்களின் அறுபதாண்டு காலத் திரையுலக ஆளுமை உங்கள் நற்பணிக்கு எப்போதும் நீர் வார்க்கும் – உரம் சேர்க்கும்.. அதிகார வர்க்கம் தவறு செய்யும்போது எப்போதும் போல தார்மீகக் குரல் கொடுங்கள்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. இந்த மாற்றத்தால் உங்களுக்குத் தேர்தலும் இல்லை – தோல்வியும் இல்லை.. மக்கள் மனதை என்றென்றும் ஆண்டவராக நீங்கள் இருப்பீர்கள். உங்களின் எஞ்சிய வாழ்நாள் நீங்கள் ஆசைப்பட்டது போலவே இந்த சமூகத்துக்காக உபயோகமாகக் கழியும்..

உங்கள் சமகால நடிகர் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் எந்த அரசியல் ஆதாயமும் பாராமல் சமூகப் பணியாற்றினார்… மக்களின் மனதை வென்றார்… அவர் எம்எல்ஏவும் இல்லை… மந்திரியும் இல்லை… ஆனாலும் அவருக்கு 78 குண்டுகள் முழங்கின…

அன்புடன்,

உங்கள் ரசிகன்

பா.முருகதாஸ்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *