Share on Social Media


பெங்களூரு : “காசர்கோடு மாவட்ட கிராமங்களில், கன்னட பெயர்களை மலையாள மயமாக்கும் முயற்சியை, மீண்டும் செய்ய வேண்டாம் என, அங்குள்ள உள்ளாட்சிகள், அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கேரள அரசை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, சித்தராமையா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:காசரகோடின் சில கிராமங்களின், கன்னட பெயர்களை மலையாள மயமாக்க, அங்குள்ள உள்ளாட்சிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இத்தகைய முயற்சி நடக்கவில்லை என, காசகோடு மாவட்ட கலெக்டர் சஜித் பாபு, மஞ்சேஸ்வரா எம்.எல்.ஏ., அஷ்ரப் விளக்கமளித்தது வரவேற்கத்தக்கது.ஆனால் இது போன்ற முயற்சிகளில், மீண்டும் இறங்க வேண்டாம் என, அங்குள்ள உள்ளாட்சிகள், அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட வேண்டும். காசர்கோடு மாவட்டத்தில், கன்னடர், மலையாளிகள் ஒற்றுமையுடன் வாழுகின்றனர். சில சமூகவிரோத சக்திகள், கிராமங்களின் பெயர்களை மாற்ற முயற்சிக்கின்றன. இந்நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இம்மாவட்டத்தில், கன்னட பள்ளிகளை மூடுவதால், கன்னட மொழி பேசும் குடும்பங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே கன்னட பள்ளிகளை திறப்பதன் மூலம், அங்குள்ள பிள்ளைகள் தாய் மொழி கற்க, வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *