Share on Social Media


கனடா மற்றும் அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடா நாட்டின் வான்கூவர் மாகாணத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக 49 டிகிரி செல்சியஸ்க்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலையானது ஒட்டுமொத்த வடமேற்கு பசிபிக் பகுதியையும் வாட்டிவருகிறது. இதன் காரணமாக இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

People try to beat the heat at a beach

People try to beat the heat at a beach
Jeff McIntosh/The Canadian Press via AP

கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவர் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் எனப் பல பகுதிகள் வெயில் அலையினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.. `இது வெறும் ஆரம்பம்தான். வெயிலின் உச்சம் ஜூலை மாதத்தில்தான் அதிகமாக இருக்கும்’ என அந்நாடுகளின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கு, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் `வெப்ப குவிமாடம்’ (Heat Dome) எனும் நிகழ்வே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பசிபிக் பகுதியின் வளிமண்டலத்தில் உயர் அழுத்தநிலை ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் காற்றை, இந்த உயர் அழுத்தநிலை உறிஞ்சிக்கொள்ளும். இதனால்தான் வெப்பநிலை உயர்கிறது என்று கூறுகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *